புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தலைமை அலுவலகம் பயிற்சியளித்தல் பயிற்சி நிறுவனம்

நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம் (ITI)

வரலாறு

நீர்பாசன திணைக்களம் 1900ல் பிரித்தானிய அரசினால் ஸ்தாபிக்கப்பட்டது. நீர்ப்பாசன திணைக்களம் அமைக்கப்பட்டு சுமார் ஏழு ஆண்டுகள் கடந்ததன் பின்னர் அதாவது 1907ல் திருகோணமலையில் நீர்ப்பாசன பயிற்சி நிலையம் (ITC) என்ற பெயரில் திணைக்களம் அதற்கே உரிய பயிற்சி நிறுவனத்தை நாட்டில் நிறுவியதை அடுத்து நீர்ப்பாசன பொறியியல் துறைக்கு பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டியது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நிலையம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு இறுதியில் பொருத்தமான இடமாக கல்கமுவ தெரிவு செய்யப்பட்டதை அடுத்து 1959 ஜனவரி முதலாம் திகதி பயிற்சி நிலையம் அங்கு அமைக்கப்பட்டது. நிறுவனத்தின் பெயரும் அவ்வப்போது மாற்றப்பட்டது. முதலாவது மாற்றத்தை குறிக்கும் முகமாக நீர்ப்பாசன பயிற்சி நிலையம் (ITC) தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமாக (TTI) மாறியது. 1974 சேவையில் ஈடுபட்டிருக்கும்போது பயிற்சியளிக்கும் நிலையமாக பெயர் மாற்றப்பட்டதோடு 1980ல் ஒழுங்கான முறையில் டிப்ளோமா பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது பெயர் மீண்டும் நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம் (ITI) என மாற்றப்பட்டது.

பொது

நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம் (ITI), குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. கல்கமுவ நகரத்தில் இருந்து மீகலாவ வீதியில் சுமார் 1.5 கி.மீ பயனம் செய்கின்றபோது நீர்ப்பாசன பயிற்சி நிலையத்தின் இடதுபக்கம் வரும்.

தற்போது நீர்பாசன பயிற்சி நிறுவனம் தலைமை அலுவலகத்தின் பயிற்சி கிளையின் கீழ் இயங்குகிறது. பயிற்சி மற்றும் ஆற்றல் விருத்திக்கு பொறுப்பான நீர்ப்பாசன பணிப்பாளர் பயிற்சி கிளையின் தலைவராக இருக்கிறார். நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கின்ற அதேவேளையில், நிரந்தர கல்வி பணியாட்டொகுதியினர் பொறியியலாளர்களையும் உதவிப் பொறியியலாளர்களையும் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் டிப்ளோமா பயிலுனர்களுக்கு பயிற்சிகளும் விரிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

வசதிகள்

நவீன விரிவுரை தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடனான விரிவுரை மண்டப வசதிகள், ஒரு முறைக்கு சுமார் 150பேர் தங்கியிருக்கும் வசதிகள், ஒரு முறைக்கு சுமார் 100பேர் உணவருந்தும் வசதிகள் என்ற வகையில் தற்பொழுது நிறுவனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறைக்கு 50 பேருக்கு கணனி ஆய்வுகூட வசதிகளையும் நிரந்தர கல்வி பணியாட்டொகுதியினருக்கு உத்தியோகபூர்வ விடுதிகளையும் கொண்டுள்ளது.

நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தின் சேவைகளும் பிரதான பணிகளும்

 • நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமாவுக்கு 2 வருட முழுநேர தங்குமிட பாட நெறியை நடத்துதல்.
 • பல்வேறு குழுக்களுக்குரிய நீர்ப்பாசன உத்தியோகத்தர்களுக்காக சேவையில் ஈடுபட்டிருக்கும்போது பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
 • வெளி ஆட்களுக்காக அரசாங்க மற்றும் அரசாங்கமல்லாத உத்தியோகத்தர்களுக்காக அவர்களின் கோரிக்கையின் மீது குறுகியகால பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • பொறியியல் உதவியாளர்களுக்காக செயல்முறைப் பரீட்சைகளை நடாத்துதல் (JTE – கனிஷ்ட தொழில்நுட்ப பரீட்சை STE – சிரேஷ்ட தொழில்நுட்ப பரீட்சை)
 • உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக அளவை முகாம்களை நடத்துதல்.
 • நீரோட்ட ஒழுங்கு முறைப்படுத்தல், திட்டங்களை அமைத்தல், நீர்ப்பாசன துறையுடன் சம்பந்தப்பட்ட ஆலோசனை சேவைகளுடன் பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்துவதற்கும் பயிற்சி நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்கிறது.

தற்போதைய செயற்பாடுகளும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும்

 • தற்பொழுது பயிலுநர் மாணவர்கள் குழுக்கள் மூன்று நீர்ப்பாசன பயிற்சி நிறுவனத்தில் நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமா முழுநேர வதிவிட பயிற்சியை பெற்றுக்கொண்டிருக்கிறது.
  • 2011/2013 நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமா – மாணவர்களின் எண்ணிக்கை – 65 (2011 பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.)
  • 2012/2014A நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமா – மாணவர்களின் எண்ணிக்கை – 32 (2011 நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.)
  • 2012/2014B நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமா – மாணவர்களின் எண்ணிக்கை – 90 (2012 ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.)

நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமாவின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற பாடங்கள்

நீ.பொ.டி. 200 நில அளவையும் மட்டப்படுத்தலும்
நீ.பொ.டி. 201 சிவில் பொறியியல் நிர்மாணம்
நீ.பொ.டி. 202 பொருட்களின் சக்தி/கட்டமைப்புகளின் சக்தி/மண் கலை
நீ.பொ.டி. 203 நீர்ப்பாசனமும் வடிகால் அமைப்பும்
நீ.பொ.டி. 204
திட்டமிடல்/ நிர்மாண நடவடிக்கை முறை / திட்டமிடல் வரைவுபடுத்தும் தரம்
நீ.பொ.டி. 205 மட்டப்படுத்தும் இயந்திரவியல்
நீ.பொ.டி. 206 கணிதம் / கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நீ.பொ.டி. 207 அளவு ஆய்வு / செலவு கணக்கிடுவதற்கான தரவுகள் / மதிப்பீடுகளை தயாரித்தல்
நீ.பொ.டி. 208 நீர் முகாமைத்துவம்
நீ.பொ.டி. 209 கணக்குகள் களஞ்சிய முகாமைத்துவம்
நீ.பொ.டி. 210 ஆங்கிலம்
 • 2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சேவைக்கால மற்றும் ஏனைய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்

2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சேவைக்கால மற்றும் ஏனைய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள், பரீட்சைகள் மற்றும் செயலமர்வுகள்

இலக்கம் நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் கலந்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை காலவரையறை (நாட்கள்)
01 புதிய மண் பரிசோதகர்கள் மற்றும் துளையிடும் உதவியாளர்களுக்கான பயிற்சி
33 05
02 சிரேஷ்ட தொழில்நுட்ப பரீட்சை – 2011 (செயல்முறை) 07 04
03 தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா தகைமை பெற்ற பயிலுநர் நுயுயுவுக்கான செயல்முறைப் பரீட்சை 35 02
04 நீர்ப்பாசன திணைக்களத்தில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பொறியியல் உதவியாளர்களுக்கான பயிற்சி 13 07
05 சிரேஷ்ட தொழில்நுட்ப பரீட்சை – 2012 (செயல்முறை) 09 04
06 சிவில் பொறியியல் பொருட்களை ஆய்வு செய்வதற்கான சிறந்த தோற்றுவாய்களை ஈடுபடுத்துதல் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் 22 01
07 உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா (சிவில்) மாணவர்களுக்கான அளவை முகாம் 66 13
08 தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா தரப்படுத்தும் பரீட்சை -2012 02 02
09 சிரேஷ்ட தொழில்நுட்ப பரீட்சை 14 04
10 நீர்ப்பாசன திணைக்களத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பொறியியலாளர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் 19 04
11 புதிய குழு (நீர்ப்பாசன பொறியியல் டிப்ளோமா) 84 03
12 நீர்ப்பாசன திணைக்களத்தில் சிவில் பொறியியல் பொருள் ஆய்வாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் 20 05
13 உலக உணவு அமைப்பின் உதவியைப் பெறுகின்ற IIALD கருத்திட்டத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்காக சிறிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன விசாரணை, திட்டமிடல், நிர்மாணித்தல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 25 04
14 நீர்ப்பாசன திணைக்களத்தின் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வெளிக்கள உதவியாளர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் 55 02
15 கனிஷ்ட தொழில்நுட்ப பரீட்சை 18 04
16 கனிஷ்ட தொழில்நுட்ப பரீட்சை 18 04
17 NDT/HNDE/NDES  தகைமை பெற்ற பயிலுநர்கள் EAA வுக்கான செயல்முறைப் பரீட்சை 2012 06 04
18 கனிஷ்ட தொழில்நுட்ப பரீட்சை பகுதி II 36 04
19 SOKKIA – CX – 102 –Total station தொடர்பாக அறிமுகப்படுத்தும் பயிற்சி 19 01
20 கனிஷ்ட தொழில்நுட்ப பரீட்சை 03 02
21 நீரியல் உதவியாளர்களுக்கான ARC – GIS நீரியல்துறை உதவியாளர்களுக்கான Total station மற்றும் மதிப்பீடுகளை தயாரித்தல் 17 03
22 இணை பயிற்சியாளர்கள், பயிற்சி அளிக்கும் இணைப்பாளர்களுக்கு பயிற்சியளித்தல் 38 02
23 சிரேஷ்ட தொழில்நுட்ப பரீட்சைகளுக்காக பதிப்பு பாடநெறி 17 05
24 உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா அளவை முகாம் - 2012 73 15

பயிற்சி நாட்காட்டியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Last Updated on Tuesday, 28 May 2013 08:22  சமீப செய்திகள்

 • 1
 • 2

Annual Transfers 2018 - Store Keeper

Application form and details can be downloaded through =>Downloads => Annu...

Annual Transfers_Engineers - 2018

for details visit => Downloads=>Annual Transfers

காப்புரிமை © 2018 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 17-01-2018.