புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி புராதன நீர்ப்பாசனம்

புராதன நீர்ப்பாசனம்

கி.பி.300 காலப்பகுதியில் பண்டுகாபய மன்னனின் காலத்தில் ஆரம்பகால நீர்ப்பாசனங்களிலிருந்து அடுத்து வந்த ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட புராதன இலங்கையின் நீர்ப்பாசன கைத்தொழில் புராதன உலகில் இருந்த நீர்ப்பாசன முறைமைகளிடையே மிகவும் சிக்கலானவற்றைக் கொண்டிருந்தன. நிலக் கீழ் கால்வாய்களை அமைப்பதற்கு மேலதிகமாக, நீரைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக முழுமையாகவே செயற்கை நீர்த்தேக்கங்களை அமைத்த முதல் இனங்களிடையே சிங்களவர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த நீர்ப்பாசன முறைமை பராக்கிரமபாகு மன்னன் ஆட்சிபுரிந்த காலத்தில் (கி.பி.1153 – 1186) விரிவாகப் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து விரிவாக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றின் பிரகாரம், முதலாவது வாவி கி.மு. 437 – 367 வரை ஆட்சிபுரிந்த பண்டுகாபய மன்னனால் அமைக்கப்பட்டது. அவர் மூன்று வாவிகளை, அதாவது, அபய வாவி, காமினி வாவி, ஜய வாவி என்பவற்றை அமைத்ததாகக் கூறப்பட்டாலும் தற்பொழுது பசவக்குளம் என்ற வாவியை மட்டும் அடையாளம் காணமுடியும். பண்டுகாபய மன்னனின் பின்னர் பராக்கிரமபாகு மன்னன், தற்பொழுது கூட விவசாயத்துக்காக நீர் வழங்கப்படுகின்ற பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட பல வாவிகளை அமைத்துள்ளார். இலங்கையை ஆட்சிசெய்த மன்னர்கள் பலர் ரஜரட்டை முழுவதிலும் உள்ள வாவிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிர்மாணிப்பதற்கும் பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதைக் குறிப்பிட முடியும்.

நீர்ப்பாசன எண்ணக்கரு மேம்பாடடைந்தமை மானிட நாகரீகத்துடன் மேலெழுந்து வந்தது. பயிர்ச் செய்யும் தேவைக்கு மேலதிகமாக புத்த தர்மத்தின் கலாசார வழித்தோன்றலையும் புராதன இலங்கையர்கள் நீர்ப்பாசன நீர் வழங்கும் விவசாயத்துக்குப் பயன்படுத்தினர்.

குளமும் - கோயிலும் (தாதுகோபுரமும்) என்ற புகழ்பெற்ற வரலாற்றுரீதியான எண்ணக் கருவின் பிரகாரம் ஒரு கிராமத்தில் முதலில் பன்சலையும் (புத்த கோயிலும்) அதன் பின்னர் குளமும் உருவானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அகழப்பட்ட நல்ல நிலையிலிருந்த மண் தாதுகோபுரம்(ஸ்தூபம்) அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.

மன்னனுக்கு பௌத்த பிக்குகளின் அறிவுரைகளும் அனுசாசனங்களும் பெருமளவில் கிடைத்தன என்பதும் மன்னரின் நிலைப்பாடு அவர் எவ்வளவுதூரம் அந்த அறிவுரைகளையும் அனுசாசனங்களையும் கடைப்பிடித்தார் என்பதில்தான் தங்கியிருந்தது என்பதும் வரலாற்றிலிருந்து தெரியவந்துள்ளது.

வரலாற்றின் பிரகாரம் புராதன காலத்தில் நீர்ப்பாசன போக்குகள் தொடர்பில் அனுராதபுரமும் பொலனறுவையும் முக்கியமானவைகளாக இருந்தன.

அனுராதபுர யுகம்: இந்த யுகம் புராதன இலங்கையில் நீர்ப்பாசன நாகரீகத்தில் மிகமிக முக்கியமான யுகமாக கருதப்படுகிறது. பெரும்பாலான பாரிய நீர்ப்பாசன கைத்தொழில்கள் இந்த யுகத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டன.

அனுராதபுர தொகுதி: நீர்ப்பாசன கலாசாரத்தில் இன்னுமொரு முக்கியமான யுகம் அனுராதபுர யுகத்துக்கு உரிய தாதுசேன மன்னரின் காலமாகும். தாதுசேன மன்னர் 459 முதல் 477 வரை நாட்டை ஆட்சிசெய்துள்ளார் அவருடைய ஆட்சிக் காலத்தில் மாபெரும் கலா வாவி நீர்த்தேக்கமும் திசா வாவிக்கு (கி.மு.307) நீர் வழங்கிய 54 மைல்கள் நீளமான ஜய கங்கை அல்லது இராட்சத கால்வாய் அமைக்கப்பட்டது. நுவர வாவிக்கு (கி.மு.முதலாம் நூற்றாண்டு) நீர் விநியோகத்ததை அதிகரிப்பதற்காக மல்வத்து ஓயாவுக்கு குறுக்காக திருப்பும் கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டாலும் பின்னர் மல்வத்து ஓயாவுக்கு குறுக்கே நாச்சதூவ (கி.மு.816 – 890) அமைக்கப்பட்டது.

பொலனறுவை யுகம்: பராக்கிரமபாகு மன்னர் (1153 – 1186) இந்த நாட்டை ஆட்சிசெய்த தலைசிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராவார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அபிவிருத்திப் பணிகள், நிர்வாக மறுசீரமைப்பு, புடைபெயர்வு என்பவைபற்றிய தகவல்கள் வரலாற்றில் காணப்படுகின்றன. மாபெரும் பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்க தொகுதி எமது புராதன பொறியியலாளர்களின் திறமையையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. கிரித்தலை, காளிங்க போன்ற நீர்ப்பாசன முறைமைகளையும் அவர் புனரமைத்தார்.

பராக்கிரம சமுத்திரம் மூன்று வாவிகளைக் கொண்டுள்ளது. அவையாவன தோப்பா வாவி, தும்புட்டுலு வாவி, எரபது வாவி என்பவையாகும். பராக்கிம சமுத்திரத்தை அமைப்பதற்காக இம்மூன்று வாவிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அடையாள நீரேந்தும் பிரதேசத்துக்கு மேலதிகமாக 24 மைல்கள் நீளமான நீர் கொண்டுவருகிற கால்வாயுடனான அங்க மெடில்ல அணையினால் அது போஷிக்கப்படுகிறது. குளத்து மதிலின் மொத்த நீளம் 9 மைல்களாகும். அத்துடன் அதன் உயரம் 40 அடிகளுக்கும் 90 அடிகளுக்கும் இடையில் வேறுபடுகிறது.

எலஹர நீர்ப்பாசன தொகுதி: மகா வமிசத்தின் பிரகாரம் வசப மன்னர் எலஹர கால்வாயை கட்டுவித்துள்ளார். மாத்தளை மலையடிவாரத்தில் ஆரம்பமாகின்ற அம்பன் கங்கை (மகாவலி கங்கையின் கிளை ஆறு) ஊடாக எலஹரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திருப்பும் கட்டமைப்பு இந்த நீர்ப்பாசன முறைமைக்கு உரியதாகும். இந்த பாரிய கால்வாய் இந்த இடத்திலிருந்து மின்னேரி, கிரித்தலை மற்றும் கந்தலாய் நீர்த்தேக்கங்களுக்கு நீரைக் கொண்டு சென்றது. எலஹரையிலிருந்து கந்தலாய் வரையிலான நீண்ட பயணத்தின்போது அது இக்குலு வாவி, ரொட்ட வாவி, மட்டளு வாவி, கோந்துறு வாவி போன்ற சிறிய வாவிகளுக்கும் நீரை விநியோகித்துள்ளது. எலஹரையிலிருந்து நீர்ப்பிரிப்பு (இதன்போது அது மின்னேரியா மற்றும் கிரித்தலைவரை இரண்டாகப் பிரிகிறது.) வரையிலான இக் கால்வாயின் முதற் பகுதி 20.75 மைல்கள் நீளமானதாகும். நேஹின்ன கால்வாயில் 2.5 மைல்களுக்கு அப்பால் அது கிரித்தலை வாவிக்குள் பிரவேசிக்கின்ற அதேவேளையில் தலவத்துர ஓயாவுக்கு பெருகிச் செல்கின்ற இன்னொரு கிளை எலஹரையிலிருந்து 25 மைல்களுக்கப்பால் மின்னேரியாவுக்குள் பிரவேசிக்கிறது. கிரித்தலை வாவியும் கந்தலாய் வாவியும் அக்போ மன்னரால் (கி.மு.604) செய்விக்கப்பட்டாலும் முதலாவாது பாராக்கிரமபாகு மன்னரால் பொலனறுவை யுகத்தில் கிரித்தலை வாவி புனரமைக்கப்பட்டது என்பது தெளிவாகும்.

மகாசென் மன்னரால் (கி.மு.275 முதல் 301) செய்விக்கப்பட்ட மின்னேரிய வாவியில் நீர் வெளியேறும் இரண்டு வழிகள் இருக்கின்றன. தெற்கு நீர் வெளியேறும் வழி ஊடாக நீர் அகல்வான் ஓயாவுக்கு விடுவிக்கப்படுகின்ற அதேவேளையில் மற்றது தற்பொழுது ஆமுலுநு எனக் குறிப்பிடப்படுகின்ற நீண்ட கால்வாய் மார்க்கமொன்றைப் பயன்படுத்தி கல்லோயா ஊடாக கந்தலாய் வாவிக்கு நீர் விடுவிக்கப்படுகிறது.

மின்னேரியா வாவி பிரதேச மக்கள் முகம்கொடுக்கின்ற காலநிலை மாற்றங்களையும் இயற்கை கஷ்டங்களையும் தவிர்த்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட வெற்றிகரமான ஒரு படைப்பு என ஆளுநர் ஹென்றி வோர்ட் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். மின்னேரியா வாவியை தழுவி புனையப்பட்ட சுவாரஸ்யமான நாட்டார் கதைகள் பல இருக்கின்றன. இதில் புகழ்பெற்ற விடயமாக இருப்பது என்னவெனில் மின்னேரியா வாவி உள்ளிட்ட நீர்ப்பாசன கைத்தொழில்கள் பலவற்றை செய்வித்து தமக்கு பெரிதும் உதவிய மன்னருக்கு தமது நன்றியைத் தெரிவிக்குமுகமாக மக்கள் மகாசென் மன்னரை தெய்வ நிலையில்வைத்து 'மின்னேரி தெய்வம்' என பூஜைகளை நடத்துகின்றனர் என்பதாகும். வாவி மதில் மீது மகாசென் மன்னருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆலயமும் இருக்கிறது.

வாவியின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1903ஆம் ஆண்டிலும் 1953ஆம் ஆண்டிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்வாறு 3 மைல்களுக்கு அப்பால் மகாசென் மன்னர் கவுடுள்ள வாவியை செய்வித்ததோடு இளவரசி பிசோ பண்டார (மகாசென் மன்னரின் சகோதரி) அதை செய்வித்ததாகவும் நாட்டார் கதைகள் இருக்கின்றன. இந்த முழு முறைமையும் நீரறுவி (cascade) எண்ணக்கருவுடன் ஒருங்கிணைந்த பள்ளத்தாக்குகள் ஊடாக அமைக்கப்பட்ட நீர்ப்பாசன முறைமைக்கு தலைசிறந்த உதாரணமாகும்.

மினிப்பே இராட்சத கால்வாய் : மேற்குறிப்பிட்ட நீர்ப்பாசன முறைமைகளுக்கு மேலதிகமாக மினிப்பே திருப்பத்திலிருந்து பள்ளத்தாக்கின் ஊடாக கால்வாய் மார்க்கம் மகாவலி கங்கையிலிருந்து அம்பன் கங்கைக்கு நீரைக் கொண்டு சென்றது. தாசென்கெலிய மன்னர் (கி.பி.459) இதை செய்வித்ததோடு அது மகாவலி இடது கரைக்கு நீர்ப்பாசன நீரை வழங்கியுள்ளது. நவீன பொறியியலாளர்களை வியப்படையச்செய்கின்ற இந்த மாபெரும் நீர்ப்பாசன கைத்தொழில், ஆற்றங்கரைக்கு சமீபத்தில் தீவாக அமைந்துள்ள குறுகிய கால்வாய் மார்க்கத்தில் நீர் பெருமளவில் பிரவேசிக்கின்ற வளைவில் ஆற்றைத் திருப்புகின்ற ஒரு முறையைக் கொண்டுள்ளதோடு அந்த இடம் நீர் பிரதான ஓட்டத்தில் மீண்டும் சேர்வதற்கு தடையாக இருக்கின்ற இரண்டு கற்றூண்களால் பாதியாக மூடப்பட்டிருக்கின்றன.

கலவை மூலம் இந்த இரண்டு கற்றூண்களை ஒன்று சேர்த்து கட்டு ஒன்றை நிர்மாணித்து இயற்கையான கால்வாய் மார்க்கமாக நீரின் அளவை பெருமளவில் மேலெழுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. நாட்டார் கதைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த நீர்ப்பாசன கைத்தொழிலைப்பற்றி தான் அவதானித்ததை வெளியிட்ட ஸ்ரீமத் ஹென்றி வோர்ட் இந்தக் கால்வாய் பாசனத்துக்கு நீர் வழங்குவதற்காக மாத்திரமன்றி படகுப் பயணத்துக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார். கால்வாயின் நீளம் 50 மைல்களாகும். அத்துடன் அங்கமெடில்ல அணைக்கு கீழ் பக்கத்தில் அது அம்பன் கங்கையுடன் சேர்கிறது. இந்த கால்வாய் மார்க்கத்தை ஆழமாக வெட்டுவதை குறைக்கின்ற பாதையூடாகப் பயணம் செய்துள்ளதை கவனத்தில் எடுத்துக்கொள்வது முக்கியமானதாகும்.

ஆரம்ப காலத்தில் நீர்ப்பாசன கைத்தொழில்

பிரித்தானியர்கள் மேற்கொள்வதற்கு ஏற்றுக்கொண்ட முதலாவது பிரதான நீர்ப்பாசன கைத்தொழில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிரம ஓயாவுக்கு குறுக்கே கிரம அணையை அமைத்ததாகும். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிரிவாபத்துவ கிராமங்களில் வயல் காணிகளின் பயன்பாட்டுக்காக நீரை ஒழுங்குறுத்துவதற்காக இது 1825 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

புதிய நீர்ப்பாசன கட்டளைச் சட்டம்

நீர்ப்பாசனம் மற்றும் வயல் காணிகளை பயிர்ச்செய்வது தொடர்பிலான பழமைவாய்ந்த பாரம்பரியங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்காகவும் வலுவுள்ளதாக்குவதற்கும் 1856க்கு முன்னர் இருந்த கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளையும் மீள உள்ளடக்கிய புதிய நீர்ப்பாசன கட்டளைச் சட்டமான 1867ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க சட்டமும் அங்கீகரிக்ப்பட்டது. ஏதேனும் உத்தேச நீர்ப்பாசன கைத்தொழில் மூலம் பயன்களைப் பெறுவதற்கு வாய்ப்;புள்ள காணி உரிமையாளர்களின் கருத்துக்களை அறிகின்றபோது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைமுறை இதில் குறிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நன்கொடைக்கு விண்ணப்பிப்பது பொருத்தமானதாக இருந்த அதேவேளையில் அரசாங்கம் முற்பணமாக வழங்குகின்ற ஏதேனும் ஒருதொகைப் பணத்தை வருடாந்த பத்து தவணைகளில் திருப்பிச் செலுத்துவதற்கு கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டது. பயன்களைப் பெறுகின்ற பிரதேசம் விரிந்து பரந்து காணப்பட்டாலும்கூட செலவுகளை உள்ளடக்குவதற்கு ரூ. 20 போதாது என்பது விரைவில் தெரியவந்தது. மேலும் 1887ல் நடைமுறைப்படுத்துவதற்காக மொல்ஸ்வர்த் பின்வரும் நீர்ப்பாசன கைத்தொழிலை முன்மொழிந்தார்.

 1. மட்டக்களப்பு றுகம் வாவி – 2400 ஏக்கர்
 2. பொரலெஸ்கமுவ வாவி – 36 ஏக்கர்
 3. பதுளை அருகில் சாம்பல் கால்வாய்
 4. வெலிகம அருகில் உள்ள போரலே – 300 ஏக்கர்
 5. மாத்தறை அருகில் உள்ள டெனகம – 1600 ஏக்கர்.
 6. மொணராகல புத்தள கால்வாய் – 1200 ஏக்கர்
 7. அல்லை வாவி – 1600 ஏக்கர்
 8. பெரிய குளம் – 600 ஏக்கர்

பொதுவேலைத் திணைக்களத்தின் நிர்வாக அறிக்கையில் முதலாவது நீர்ப்பாசன கைத்தொழில் பட்டியல்

மோல்ஸ்வர்த் 1870ல் ஓய்வுபெற்றார். அத்துடன் நீர்ப்பாசன கைத்தொழிலுக்காக செய்த செலவுகள் 1871ல் முதல்முறையாக பொதுவேலைத் திணைக்களத்தின் நிர்வாக அறிக்கையில் தனியான ஒரு விடயமாக சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும் நீர்ப்பாசனத்துக்காக செய்த செலவுகள் மொத்த வரவு செலவு திட்டத்தில் 1% விட குறைவாக இருந்தது. பொதுவேலைத் திணைக்களம் முதல்முறையாக தனதுநிர்வாக அறிக்கையில் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் நிர்மாண பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நீர்ப்பாசனங்களின் பட்டியல் ஒன்றை உள்ளடக்கியது.

1871 நிர்வாக அறிக்கையில் உள்ளடங்கியிருந்த விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பூர்த்திசெய்யப்பட்ட நீர்ப்பாசன கைத்தொழில்கள்:

 1. தெதுறு ஓய மேல் சுலுசு
 2. பெரிய குளம் கால்வாய்
 3. தெனகம மற்றும் உயன்வௌ
 4. ஹொரபொர வாவி
 5. குடா வாவி
 6. கின்சிகுண நீர்ப்பாசன கைத்தொழில்
 7. றுகம் வாவி

நிர்மாண பணிகள் நடைபெறுகின்ற நீர்ப்பாசன கைத்தொழில்கள்:

 1. அல்லை வாவி
 2. திவ்லான வாவி
 3. தெதுறு ஒய கால்வாய்
 4. கம்புக்குமுனை வில்லு
 5. குருனேகன்கே ஆறு அணை
 6. கொஸ்பொத்து ஒய, கும்புகல்பிட்டிய
Last Updated on Wednesday, 24 April 2013 03:57  







சமீப செய்திகள்

Inundation Maps & Hydrological Annual

සිතියම් සදහා Downloads => Flood Data වෙත යොමුවෙන්න. Hydrological Annual සදහ...

Act. DA Appointment, EAA transfers & Appeal -2018

Details => Download=>Annual transfers

காப்புரிமை © 2017 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 04-12-2017.