புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி வரலாறு

வரலாறு

மத்திய நீர்ப்பாசன சபையை அமைத்தல்

1884ஆம் ஆண்டில் பொது வருமானத்திலிருந்து நீர்ப்பாசன செலவுத் தலைப்புக்கான பங்களிப்பு ரூ.200,000 என விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 1887ஆம் ஆண்டில் ஆளுநரின் தலைமையில் மாகாணங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக மாகாண நீர்ப்பாசன சபைகளுடன் மத்திய நீர்ப்பாசன சபைகளை உருவாக்கி கட்டளைச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மாகாண சபைகள் அரசாங்க அதிபர்களின் தலைமையின் கீழ் இருந்தன. அத்துடன் ஒவ்வொரு மாகாணத்தின் மாகாண பொறியியலாளரினதும் பிரதான நில அளவையாளரினதும் அங்கத்துவத்தை அச்சபைகள் கொண்டிருந்தன. கொள்கைகள் மற்றும் மத்திய நிர்வாகம் மத்திய நீர்ப்பாசன சபையின்மூலம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அதற்கு தலைமைவகித்த ஆளுநருக்கு மேலதிகமாக பொதுவேலைப் பணிப்பாளர், அளவைகள் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் சிலரும் அதில் அங்கம் வகித்தனர். தமது தாய் திணைக்களத்தின் பொதுவான பணிகளுக்கு மேலதிகமாக இந்த நீர்ப்பாசன சபைகளின் பணிகளை மேற்கொள்வதற்காக மேலதிகமாக பொது வேலைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இடைச் சேர்க்கப்பட்டனர். 1890 யூலை மாதம் இரண்டாம் திகதி நடத்தப்பட்ட மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் முதலாவது கூட்டத்தின்போது, ஸ்ரீமத் ஆர்தர் ஹெவ்லொக், நீர்ப்பாசன நடவடிக்கைகளை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் தமது குறிக்கோளை வெளியிட்டார். ஆயினும் கருத்திட்டங்களை அங்கீகரிக்கின்றபோது மிகவும் முன்னறிவுடனும் கவனமாகவும் அதை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஸ்ரீமத் ஆர்தர் ஹெவ்லொக்கின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவம்வாய்ந்த நீர்ப்பாசன கைத்தொழில் மன்னாரில் அமைந்துள்ள இராட்சதக் குளத்தை மறுசீரமைத்ததாகும்.

பொதுவேலைத் திணைக்களத்திலிருந்து ஒதுங்குதல் மற்றும் முதலாவது நீர்ப்பாசன பணிப்பாளர் நியமனம்

நீர்ப்பாசன உதவியாளர் ஹென்றி பாக்கர் 1898ஆம் ஆண்டு மத்திய சபையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தராக மத்திய நீர்ப்பாசன சபைக்கு நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், 1896 – 1903 வரை இலங்கையில் நிர்வாகம் தொடர்பாக ஸ்ரீமத் வெஸ்ட் றிஜ்வேயின் மீளாய்வில் கூறப்படுகின்றவிதத்தில் நீர்ப்பாசன சபைமுறை திருப்தியாக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது. 'பொதுவேலை திணைக்களத்தின் பொறியியலாளர்கள் நிறைவேற்றவிருந்த நீர்ப்பாசன பணிகள் கஷ்டமான மேலதிக சுமையொன்றை அவர்கள் மீது சுமத்தியது. அதனால் அவை உற்சாகமில்லாமலும் வினைத்திறன் அற்றவகையிலும் மேற்கொள்ளப்பட்டன' என அவர் குறிப்பிட்டார். 'மிகத் தீவிரமான மேற்பார்வை தேவைப்பட்ட நீர்ப்பாசன பணிகளுக்காக உண்மையில் மிக சொற்ப அளவு மேற்பார்வையே கிடைத்தது.' என ஸ்ரீமத் வெஸ்ட் றிஜ்வே மேலும் குறிப்பிட்டார்.

எப்.ஏ.குரே, 1899ஆம் ஆண்டில் பொது வேலை பணிப்பாளரானார். அத்துடன் கூப்பரின் 1899 நிர்வாக அறிக்கையில் எவ்வித நீர்ப்பாசன பணிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 'நீர்ப்பாசன பராமரிப்பு பல மாகாணங்களில் இத்திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவியைப் பெறுகின்ற மாகாண நீர்ப்பாசன சபைகளுக்கு முக்கியமாக ஒப்படைக்கப்பட்டிருந்தன.' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய நீர்ப்பாசன சபையில் நீர்ப்பாசன உதவியாளரான பாக்கர் அவர்களின் கீழ் ஏனைய நீர்ப்பாசன உதவியாளர்கள் சேவையிலீடுபடுத்தப்பட்டிருந்ததோடு பாரிய நீர்ப்பாசன நடவடிக்கைகள் அவர் பொறுப்பில் நடைப்பெற்றன.

வினைத்திறன்மிக்கவகையில் நீர்ப்பாசன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 1900 மே 15ஆம் திகதி, பொதுவேலைத் திணைக்களத்திலிருந்து ஒதுங்கிய ஒரு நிறுவனமாக நீர்ப்பாசன திணைக்களம் அமைக்கப்பட்டது. பொதுவேலைத் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராக இருந்த எச்.டி.எஸ்.வோர்ட், முதலாவது நீர்ப்பாசன பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

எச்.டி.எஸ்.வோர்ட், முதலாவது நீர்ப்பாசன பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கூப்பர் தனது 1899 நிர்வாக அறிக்கையில் இவ்வாறு எழுதுகிறார். '24 வருட சேவையின் பின்னர் எச்.டி.எஸ்.வோர்ட் இத்திணைக்களத்திலிருந்து பிரிந்து செல்கிறார். பொதுவேலை உதவிப் பணிப்பாளாராக அவர் வழங்கிய நம்பகத்தன்மைமிக்க ஒத்துழைப்புக்கும் தலைசிறந்த உதவிக்கும் பகிரங்கமாக நன்றி தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன். நீர்ப்பாசன பணிப்பாளராக நியமனம்பெற்று பதவியுயர்வு பெற்று இத்திணைக்களத்தை விட்டுச் செயல்கின்றபோது அவருடைய எதிர்கால வெற்றிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வோர்ட்டுக்கு எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.'

1900ஆம் ஆண்டில் நாட்டின் சனத்தொகை 35,21,000 ஆக இருந்தது. அத்துடன் 37.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு 5.6 மில்லியன் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது இலங்கையில் பயிரிடப்ட்ட மொத்த நிலத்தின் அளவு 670,000 ஏக்கராகும். அத்துடன் நீர்ப்பாசன நீர் வழங்கலின் கீழ் பயிரிடப்பட்ட 220,000 ஏக்கரையும் மழை நீரால் போசிக்கப்பட்ட 450,000 ஏக்கரையும் கொண்டதாக இந்த நிலத்தின் அளவு இருந்தது. அரிசி உற்பத்தி ஆண்டொன்றுக்கு 18.6 மில்லியன் புசலாக இருந்தது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் உருவாக்கம்

வென்ட் றிஜ்வே ஆளுநரால் தயாரிக்கப்டட அறிக்கையின்மூலம்  எச்.டி.எஸ்.மார்ட் முதலாவது நீர்ப்பாசன பணிப்பாளராக நியமிக்கப்பட்டு 1900 மே மாதம் 15ஆம் திகதி நீர்ப்பாசன நடவடிக்கைளுக்காக தனியான  திணைக்களமொன்று அமைக்கப்பட்டது. 2.1 படத்தைப் பார்க்கவும். நீர்ப்பாசன உதவியாளர் ஹென்றி பாக்கர் அவருக்கு இரண்டாவதாக இருந்ததோடு இன்னும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் ஏழுபேர் புதிய திணைக்களத்துக்கு நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் பொதுவேலை திணைக்களத்திலிருந்து இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த உதவி நில அளவையாளர்கள் இருவரும் பத்து பரிசோதகர்களும் புதிய திணைக்களத்தில் பிரதான பணியாளர்களாக இருந்தனர். திணைக்களம் கொழும்பு கோட்டையில் யோர்க் வீதியில் 'ஆர்கேட்' என்ற கட்டிடத்தில் இயங்கியது.

சகல நீர்ப்பாசன கைத்தொழில் புனரமைப்பு பணிகளும் நிர்மாண பணிகளும் பாரிய நீர்ப்பாசன திட்டங்களின் பராமரிப்பு பணிகளும் புதிய திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டன. மாகாண நீர்ப்பாசன சபைகள் ஒழிக்கப்பட்டதோடு சிறிய நீர்ப்பாசன பராமரிப்பு பணிகள் அரசாங்க அதிபரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

புதிய திணைக்களத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள்

புதிய திணைக்களத்தின் தொழில்நுட்ப பணியாளர்களில் ஹென்றி பாக்கர் தகுதிபெற்ற பொறியியலாளராக இருந்தாலும் அப்போது நீர்ப்பாசன உதவியாளர் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் திணைக்களத்தின் இரண்டாவது உயர் பதவியை வகித்ததோடு அதற்கு மிகப்பொருத்தமான மதிப்புமிக்க நபராகவும் இருந்தார்.

பாக்கருக்கு உதவும்பொருட்டு, நீர்ப்பாசன பொறியியலாளர்கள் ஏழுபேரைக்கொண்ட குழுவொன்று களத்தில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த பொறியியலாளர்களுக்கு பின்வருமாறு பிரித்துக் கொடுக்கப்பட்டன.

ஈ.டப்ளியு.கேடி வளவை, கிரிந்தி ஒய
ஜே.டப்ளியு.நன் கலா வாவி
ஈ.ஜீ.ஈவிஸ் மின்னேரி
எஸ்.எம்.பவர் சாகாமம்
ஜி.எச்.ஓபிறயன் வாகனேரி
ஆர்.எப்.மொரிஸ் உன்னிச்சை
ஓ.டி.வொட்ஸ் ரூகம்

இவ்வுத்தியோகத்தர்களைத் தவிர்த்து உதவி பொறியியலாளர் ஒருவர், நீர்ப்பாசன நில அளவையாளர் ஒருவர், உதவி நில அளவையாளர்கள் இருவர், நீர்ப்பாசன பரிசோதகர்கள் மற்றும் உதவி பரிசோதகர்கள் பத்துபேர் வோட் அவர்களால் களத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

1900 மே 15ஆம் திகதி திணைக்களம் அதன் பணிகளை ஆரம்பித்தபோது அது பின்வரும் செயற்படும் திட்டங்களை பொதுவேலை திணைக்களத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது.

அ. கலா வாவி
ஆ. அனுராதபுர நகரில் உள்ள குளங்கள்
இ. மின்னேரி, கிரித்தலை, தோப்பா வாவி
ஈ. மட்டக்களப்பு பட்டிபொல ஆறு
உ. மன்னார் இராட்சதக் குளம்
ஊ. திசா வாவியும் வலவ கங்கையும்
எ. தெதுறு ஓயா

1900இன் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி

இத்தசாப்தத்தின் நடுப்பகுதியில் திணைக்களத்தின் பொறியியல் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 22ஆக இருந்தது. அத்துடன் முதலாவது உலக மகா யுத்ததின் காரணமாக அக்காலப்பகுதியில் அதன் பணிகள் பொதுவாக அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை. இன்னுமொரு காரணம் பணியாட்டொகுதியினரின் சுகாதார நிலையாகும். பல உத்தியோகத்தர்கள் சுகவீனம் காரணமாக விடுமுறை பெற்றிருந்தனர்.

திணைக்களத்தின் தலைமை அலுவலகம் தொடர்ந்தும் திருகோணமலையில் அமைந்திருந்தது. அதன் காரணமாக நீர்ப்பாசன அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பெரும்பாலும் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டன. எவ்வாறாயினும் சிரேஷ;ட பணியாளர்கள் அடிக்கடி கொழும்புக்கு வந்ததன் காரணமாக தலைமை அலுவலகம் கொழும்புக்கு வெளியே அமைந்திருந்ததன் பாதிப்பு உணரப்பட்டது. தலைமை அலுவலகத்தை கொழும்புக்கு கொண்டு வருவது தொடர்பான விடயம் இந்த தசாப்தத்தின் இறுதிப்பகுதியில்  மேற்கொணரப்பட்டது.

நீர்ப்பாசன பணிப்பாளர், பெல்பரின் அர்ப்பணிப்புடனான தலைமைத்தவத்தின் காரணமாக இந்த தசாப்தத்தில் நீர்ப்பாசனத்தை திட்டமிடுகின்றபோது, வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு நடவடிக்கையின்போதும் நீர் முகாமைத்துவத்தின்போதும் மிகவும் விஞ்ஞான ரீதியான ஈடுபடுத்தல்களின் விரிவாக்கம் மேலெழுந்தன. 'நீர்ப்பாசன அட்டவணை' என்ற பெயரில் நீர்ப்பாசன பொறியியலாளர்களுக்காக வழிகாட்டுகின்ற தொழில்சார்ந்த அட்டவணைகள் 1914ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. நிர்வாக வழிகாட்டல்களுக்கான நீர்ப்பாசன கைநூலும் அவ்வாண்டிலேயே வெளியிடப்பட்டன.

அப்போதிருந்த நீர்ப்பாசன கட்டளைச் சட்டம் திருத்தப்பட்டதோடு 1909ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டப்ளியு.எல்.ஸ்ரேஞ்சரின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு 1917ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க புதிய கட்டளைச் சட்டம் வலுவுள்ளதாக்கப்பட்டது.

இந்த காலப்பகுதிகளுக்கிடையில் பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டன. குறித்த பிரதேசங்களுக்குப் பொறுப்பாக பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர்களுடன் முழு நாட்டையும் உள்ளடக்கி நிர்வாகப்படுத்த ஆறு நீர்பரப்பிற்குரிய பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டது. உப தொகுதிகளுக்குப் பொறுப்பாக 26 நீர்ப்பாசன பொறியியலாளர்கள் இருந்தனர். பிரிவு பொறியியலாளர்கள் தலைமை அலுவலகத்திலிருந்து செயற்பட்டதுடன் உப தொகுதி பொறியியலாளர்கள் வெளிக்களத்தில் செயலாற்றினர்.

பன்முகப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மிகவும் அனுகூலமானதாக நிரூபிக்கப்பட்டது. அத்துடன் பணிகளை நிறைவேற்றவதற்காக அது பாரியளவில் வசதியாக இருந்து சிறு விடயங்கள் என தலைமை நிலையத்தில் தவிர்க்கப்பட்ட பல பணிகளை இவ்வாறு பிரதேச ரீதியாக நிறைவேற்றிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

1930 தசாப்தத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பிரதான பணிகள் சில

மல்வத்து ஒய நீர் வளங்களைத் திட்டமிடுதல்

அம்பன் கங்கையின் நீரை இராட்சதக் குளம்வரை மல்வத்து ஒய பள்ளத்தாக்குக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கு இந்த தசாப்பத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. வட மத்திய மற்றும் வட மாகாணங்களில் மல்வத்து ஒய நீரேந்து பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான குளங்களுக்கு அப்பிரதேசத்திலிருந்து பெருகி வருகின்ற மழை நீர் முழு அளவில் தேவைப்பட்டது என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு சில வருடங்களில் வாவிகளில் நீர் மிகையாக இருந்ததையும் குளங்களில் வான் பாய்ந்த நீர் பெருமளவில் கடலுக்குப் பெருகிச் சென்றதையும் காண முடிந்தது. இவ்வாறு அதிக மழைவீழ்ச்சியுள்ள வருடங்களில் குளங்கள் வான்பாய்வதைத் தடுப்பதற்காக அவை பெரிதாக்கப்பட்டால் மழை நீரில் தலை சிறந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உணரப்பட்டது. குளங்களின் கொள்ளளவை அதிகரித்துக்கொள்வதன்மூலம் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் பெருமளவு நீரை பயன்படுத்தாமல் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதைக்  காணமுடிந்தது. இராட்சதக்குளத்தின் கீழ் நீர்ப்பாசன நீரை வழங்குவதற்காக இன்னும் ஒரு தொகை காணிகளை அபிவிருத்தி செய்வதற்கும் அகத்திமுறிப்பில் இக்காணிகளுக்கு வினைத்திறன் மிக்க நீர்ப்பாசன முறைமையொன்றை வழங்குவதற்கும் திட்டமொன்று இருந்துள்ளது.

மகாவலி கங்கையின் கிளை ஆறான மாத்தளை குன்றுகளில் நீர் தோற்றுவாயுடனான அம்பன் கங்கையிலிருந்து மல்வத்து ஓயா பள்ளத்தாக்குக்கு நீரைக் கொண்டுவர முடியுமா என்பதை உறுதிசெய்துகொள்வது இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இருந்தது. ஆகவே இராட்சத குளத்துக்கு நீர் விநியோகிப்பதை அதிகரித்து அருவி ஆறு இடது கரையில் அமைந்துள்ள உத்தேச அகத்திமுறிப்பு திட்டத்திற்கு நீர் விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டு நாலந்த ஓயாவில் உள்ள நீரை மல்வத்து ஓயா  பள்ளத்தாக்கிற்கு திருப்பும் திட்டம் ஆராயப்பட்டது. நாலந்த ஓயாவுக்கு குறுக்கே உத்தேச நீர்த்தேக்கத்துக்கும் தம்புல்லைக்கு அருகில் இன்னுமொரு சேகரிப்பு நீர்த்தேக்கத்துக்காக சமஉயரக் கோட்டு அளவைகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தின் மேற் பகுதியில் அமைந்திருந்த உத்தேச அணைகள் மற்றும் கால்வாய்களுக்காக திட்டங்களையும் மதிப்பீடுகளையும் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீர் மதிப்பீடு, நீர் விரயம் மற்றும் பருவகால திட்டமிடல்

நீர் விரயமாவதை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு போகத்தின் பிரகாரம் திட்டமிடுதல் நெற் பயிர்ச் செய்கைக்காக நீரை மதிப்பீடு செய்தல் ஆகிய பணிகள் 1909ஆம் ஆண்டு ஜே.எம்.டப்ளியு. பார்க் அவர்களால் மெற்கொள்ளப்பட்டது. அத்துடன் இப்பணிகளுக்காக அப்போதிருந்த ஒரே வழிகாட்டல் ஐ.அ. விவசாய திணைக்களத்தின் 46ஆம் இலக்க அறிவித்தல் பிரசுரமாகும். இதன் பிரகாரம், வெற்றிகரமாக கன்றுகளை வளர்ப்பதற்காக மண்ணின் உலர் எடையைக் கவனத்தில்கொள்கின்றபோது அவற்றில் உள்ளடங்கியுள்ள பொருட்களை அடிப்படையாகக்கொண்டு 12% முதல் 20% ஈரம் தேவைப்பட்டது. மேலும் வருடத்தின் எந்த காலப்பகுதியிலும்  மண்ணின் ஈரத்தன்மையின் அளவு 8% முதல் 14% கீழ் வீழ்ச்சியடைதலாகாது. வாவி நீரின் மேற்பரப்பு நீராவியாவதால் விரயமாவது மற்றும் விநியோக முறைமையின்போது கசிவதால் விரயமாவது தொடர்பாக அவர்கள் அறிந்திருந்தாலும் அதை அளக்க முடியால் இருந்தது. எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை வரைவிலக்கணப்படுத்தியதன்மூலம் பெரும்போகத்தில் மாதம் முழுவதிலும் நீர் 8 அங்குலமும் சிறு போகத்தில் 10 அங்குலமும் கிழக்கு மாகாணத்தில் நீர் தேவையாக கருதப்பட்டது. நிலத்தைப் பண்படுத்தும்பணிகள் முற்றுமுழுதாக மழை நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் பெரும்போகத்தில் நீர்ப்பாசன நீர் விநியோகிக்கப்படவில்லை. கால்வாய்களில் விரயத்துக்கு 33% பயன்படுத்தப்பட்டன. அத்துடன் சிறுபோகத்தில்  நிலத்தைப் பண்படுத்துவதற்கு 12 அங்குல நீர் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விநியோகிக்கப்படும் நீரில் சிறுபோகத்தில் 40 அங்குல நீர் ஆவியாவதாக கருதப்பட்டாலும் பெரும்போகத்தில் ஆவியாதல் ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாவிக்கு நீர் பெருகிவருவதை சமப்படுத்துவதாக நம்பப்பட்டது.

நீர்ப்பாசன வதிகளை வழங்குதல்

1912 முதல் 1913 வரையிலான காலப்பகுதியில், நீர்ப்பாசன திணைக்கள பணியாட்டொகுதியினர் பாரிய திட்டங்களைப் பூர்த்திசெய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய நீரைப் பயன்படுத்துவதற்காக முன்மொழிவுகளில் உள்ளடங்க வேண்டிய விபரங்களைத் தயாரிக்கும் பணிகளில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தனர். திட்டவட்டாக ஒரு பிரதேசத்தை அடையாளம் கண்டு நீர்ப்பாசன வசதிகளுக்காக விரிவான திட்டமொன்றை வழங்கவேண்டியது அவசியம் என்பது அப்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பயிர்ச்செய்கின்றவர்களுக்கு தம்முடைய கால்வாய்களை தாமே வெட்டிக்கொள்வதற்கு இடமளித்து வாவியின் பிரதான பகுதிகளையும் சிலவேளைகளில் பிரதான கால்வாய்களை மாத்திரம் அமைப்பது போதுமானது என கருதப்பட்டது. இந்நடவடிக்கைமுறை மாற்றப்பட்டதோடு முழுமையான கால்வாய் முறைமையொன்றை அமைக்கவேண்டியதன் அவசியம் அடையாளம் காணப்பட்டது. எவ்வாறாயினும் நீர்ப்பாசனத்துக்காக நீரை விநியோகிப்பதற்கு முன்னர், பாரிய அளவிலான அடிப்படை அளவைகள், திட்டமிடல், நிர்மாணம் என்பவை இத்திட்டத்தில் தொடர்புபட்டன.

பண்ணையில் நீர் முகாமைத்துவம்

காலனித்துவ பொறியியலாளர்கள் நீர்ப்பாசன கைத்தொழிலை திட்டமிடல் மற்றும் நிர்மாணித்தல் தொடர்பாக அக்கறை காட்டியது மாத்திரமல்ல 'பண்ணையில்' நீர் முகாமைத்துவம் தொடர்பாகவும் தீவிர அக்கறை காட்டினர். அப்போது தொகுதிக்குப் பொறுப்பாகவிருந்த ஒருசில பொறியியலாளர்கள் வெளியிட்ட பின்வரும் கூற்றின்மூலம் அது தெளிவாகிறது. 1915ல் தெற்கு தொகுதியின் தொகுதி பொறியியலாளரான ஆர்எப்.மொறிஸ்ட் அவர்களின் பிரகாரம், 'பயிர்ச்செய்கை சட்டம் இருந்தபோதும், ஏர் குறைந்த அளவில்தான் பயன்படுத்தப்பட்டது. மாடுகளைப் பயன்படுத்துவதால் ஓரளவு வேலை நடைபெறுகின்ற அதேவேளையில் மாத்தறை மாவட்டத்தில் ஒருசில இடங்களில்  மண்வெட்டியை மாத்திரம்  பயன்படுத்தி மேற்பரப்பு மண்ணைக் கொத்தி புரட்டும் பணிகள் நடைபெறுகின்றன.' அம்பாந்தோட்டை நீர்ப்பாசன பொறியியலாளர் திசா வாவியின் கீழ் மிகவும் இலாபகரமான நீர் வழங்கல்முறையை ஏற்படுத்துவதற்கு கனிசமானளவு முயற்சியை மேற்கொண்டதோடு விசேட பேரவைக் கூட்டங்களை நடாத்துவதற்கு அடிக்கடி திசாவுக்குச் சென்ற அம்பாந்தோட்டை உதவி அரசாங்க அதிபரிடமிருந்து அவருக்கு பெரும் உதவிகள் கிட்டின. தரையை மட்டப்படுத்தி வரப்புகளை அமைக்கும் பணிகள் நீரை வழங்குவதற்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. மழைவீழ்ச்சியின் தாக்கத்தைக் கவனத்திற்கொண்டு அதன் பின்னர் போதியளவு நீர் விநியோகிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் நீரை விநியோகிக்கின்றபோது பயன்படுத்தப்பட்ட அளவுகோல் சேற்று நிலமாக்குகின்ற காலப்பகுதியில் வாரத்திற்கு 4 அங்குலமாகவும் அதன் பின்னர் வாரத்திற்கு 3 அங்குல வீதமாகவும் இருந்தது.

முற்போக்கு கொள்கை

அரிசியின் அதிக விலை மற்றும் அதைப் பெற்றுக்கொள்வதிலிருந்த கஷ்டம் காரணமாக நாட்டின் உணவு உற்பத்தி சிக்கலை  விசாரிப்பதற்காக ஆளுநரால் 1920ல் குழுவொன்று நியமிக்கப்பட்டது. நீர்ப்பாசன பணிப்பாளர் பேக்கர் இக்குழுவின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். இக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் முக்கியமான முன்மொழிவொன்று பின்வருமாறு அமைந்திருந்தது.

"அரசாங்கத்தினால் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கமநல கொள்கையை கவனத்திற்கொண்டு, சுமார் பத்து வருடங்களாக இடைநிறுத்தப்;பட்டிருந்த புதிய நீர்ப்பாசன கைத்தொழில் நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் நீர்ப்பாசன திணைக்களம் வருமானம் ஈட்டும் திணைக்களமாக அல்ல பொதுவேலை திணைக்களம்போன்று பணத்தை செலவுசெய்கின்ற திணைக்களமாக கருதப்பட வேண்டும் என குழு முன்மொழிகிறது."

1920ல் நீர்ப்பாசனம் தொடர்பாக முற்போக்கு கொள்கையொன்றைப் பரிந்துரைசெய்து நீர்ப்பாசன பணிப்பாளர் அரசாங்கத்துக்கு ஓர் அறிக்கையை ஒப்படைத்தார். அந்தப் புதிய பரிந்துரைகளின் அண்ணளவான குறிப்பொன்று கீழே தரப்பட்டுள்ளது.

  1. திணைக்களத்தின் தலைமை அலுவலகம் திருகோணமலையிலிருந்து புறக்கோட்டையின் பழைய நகர மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது.
  2. பணியாளர்களுக்கான வீடமைப்பு ஏற்பாடுகள்
  3. வெளிக்கள பணியாளர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் சம்பளத்தையும்  அதிகரித்தல்
  4. பொறியியலாளர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் சம்பளத்தையும் அதிகரித்தல்
  5. நீர்ப்பாசன திட்டங்களை முன்னேற்றுதல்
  6. பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை மேலும் புலனாய்வு செய்தலும் நிர்மாணித்தலும்

1930ஆம் ஆண்டின் பின்னர் முன்னேற்றங்கள்

1930ஆம் ஆண்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் தலைமையகம் திருகோணமலையிலிருந்து புறக்கோட்டை நகர மண்டபத்துpற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் 1931 நவம்பர் மாதத்தில் அது கொழும்பு கோட்டை செயலக கட்டிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் டப்ளியு.பிறவுன் நீர்ப்பாசன பணிப்பாளரானதோடு 1931ல் பீ.ஜீ.மீடின் அப்பதவியில் நியமிக்கப்படும்வரை பணிப்பாளர் பதவியை வகித்தார். பிறவுன் பணிப்பாளர் பதவியை வகிக்கின்றபோது  1930 மே மாதத்தில் கொழும்பில் பல பிரதேசங்களில் அனர்த்தத்தை உண்டாக்கிய பெரும் வெள்ளப்பெருக்கின் தாக்கத்துக்கு திணைக்களம் முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. களனி கங்கையின் வெள்ளப் பெருக்கு பாதுகாப்பு திட்டம் தோல்வியடைந்ததைப்பற்றி பொறியியலாளர் குழுவொன்று விசாரணைசெய்தது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிகள் தெளிவாக குறிக்கப்பட்டதோடு 1936ல் கெனடி திணைக்களத்தின் நிறுவன கட்டமைப்பை மாற்றினார். பயிர்ச்செய்கை அதிகரிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு நாடு முழுவதிலும் பரவியிருந்த கிராமிய நீர்ப்பாசன கைத்தொழிலை புனரமைப்பதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டதோடு விசேட நடமாடும் கிராமிய நீர்ப்பாசன கைத்தொழில் பிரிவொன்று உருவாக்கப்பட்டது. மேலே விபரிக்கப்பட்ட நீர்ப்பாசன
திணைக்களம் புதிய பிரதான நீர்ப்பாசன கைத்தொழில்கள் பலவற்றை ஆரம்பித்தது. 1939ல் மினிப்பே கால்வாய் அணையை புனரமைத்ததை அடுத்து திணைக்களத்தின் வரலாற்றில் முதல்முறையாக மகாவலி கங்கை நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இத்தசாப்தத்தில் 1937ல் பராக்கிரம சமுத்திர திட்டத்திலும் மினிப்பேயிலும் முதல்முறையாக கனரக இயந்திரங்கள் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

மக்களின் தேவைகளின் பிரகாரம் விவசாய காணிகளை படிப்படியாக அபிவிருத்தி செய்வதற்காக, முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நீர்ப்பாசன கைத்தொழிலை புலனாய்வுசெய்வதற்கும் நிர்மாணிப்பதற்கும் 1934ல் மாவட்ட விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டன. விவசாயிகளின்தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு இத்திணைக்களம் பெரிதும் நன்மைபயக்கக்கூடியதாக இருந்தது. இத்தசாப்தத்தில், திணைக்களத்தின் செயற்பாடுகள் தெளிவாகவே விரிவடைந்தன.

நீரியல் ஆய்வுகூடத்தை அமைத்தல் (ஆய்வுகூடத்தின் தோற்றம்)

கலாநிதி ஆர்.வி.பர்ன்ஸ் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு பொறுப்பான பொறியியலாளர் ஆக நியமிக்கப்பட்டு தனது கெனடியின் வழி காட்டலின் கீழ் 1937 பெப்ரவரி மாதத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கொழும்பு பிரதேசத்தில் பல இடங்களில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக கவனத்தில் எடுத்துக்கொண்டதன் பின்னர் இறுதியில் புலர்ஸ் வீதியும் ஜாவத்த வீதியும் சந்திக்கின்ற இடத்தில் காணித் துண்டொன்று தெரிவுசெய்யப்பட்டது. இக்காணித் துண்டைப் பயன்படுத்துவதற்காக 1937ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் அனுமதி பெறப்பட்டது. அவர் கட்டிடத்தையும் அதன் உள்முக அமைப்பையும் வடிவமைத்து அதன் நிர்மாண பணிகளை ஆரம்பித்தார். 1937 டிசம்பர் மாத இறுதியில் சுமார் 50 அடி நீளமான கண்ணாடி பக்கமுடைய ஜேர்மன் சாய்வுறு நீர் பீலி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டது. ஆய்வுக்காக நீரை விநியோகிக்கும்பொருட்டு வெளியேற்ற குழாய்களையும் குழாய் முறைமையொன்றையும் பொருத்துவது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் 1938ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவை பொருத்தப்பட்டவுடன் ஆய்வுகூடம் பயன்பாட்டுக்குத் தயாரானது.

மகாதேசாதிபதி ஸ்ரீமத் அன்றூ கெல்டிகொட் 1938ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி நீரியல் அய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். பர்ன்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்று 8 மாதங்களுக்குள் கட்டிடம் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பௌதிக மாதிரி 1938ல் நிர்மாணிக்கப்பட்ட நில்வலா கங்கை மாதிரியாக இருந்ததோடு 1939ல் களனி கங்கை மாதிரி நிர்மாணிக்கப்பட்டது.

1935 முதல் 1939 வரை நீர்ப்பாசன பணிப்பாளராகவிருந்த ஜே.எஸ்.கெனடிப்பின் தொலைநோக்கு காரணமாக முன்னைய தசாப்தத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டமைப்பு மாற்றப்பட்டு பலப்படுத்தப்பட்டது. 1939ல் நீர்ப்பாசன பணிப்பாளராக நியமனம்பெற்ற எஸ்.ஜி.டேலரின் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உரிய நிறுவனத்தை அமைத்ததன் பின்னர் 1940 முதல் 1950 வரையிலான தசாப்தத்தில் கெனடிக் எண்ணக்கரு செயற்பாடு மிகவும் வலுவடைந்தது. 11 வருட என்ற நீண்ட காலம் திணைக்களத்தில் சேவையாற்றிய பணிப்பாளராக அவர் இருந்தார். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் காரணமாக தசாப்தத்தின் ஆரம்பத்தில் திணைக்களத்தின் செயற்பாடுகளில் ஓரளவு பின்னடைவு இருந்துள்ளது. டேல் மிகச் சிறந்த வேலைத் தலைவராக இருந்ததோடு நேர்மையாகக் கதைத்த அவர் பாரபட்சமின்றி அனைவரையம் கவனித்துக்கொண்டார். திணைக்களத்தின் செயற்பாடுகளின் வளர்ச்சிக்காக அவர் இரவு பகல் பாராமல் செயலாற்றினார். நீர்ப்பாசன திணைக்களம் இக்காலப்பகுதியில் குறிப்பாக உணவுற்பத்தி முயற்சிகளுக்காக நீர்ப்பாசன திணைக்களத்தை பெரும் சக்தியுடன் முன்னேற்றத்தை நோக்கி கொண்டு சென்றது. எவ்வாறாயினும் இந்நிலையைப் புரிந்துகொண்ட டேலர், நிறைவேற்று மாவட்டங்களின் எண்ணிக்கையை 27 லிருந்து 18 வரை குறைத்தும் நாட்டை 6 பிரதேச பிரிவுகளாகப் பிரித்தும் திணைக்களத்தின் பிரதேச அமைப்பை மீண்டும் தயாரித்தார். அப்போதைய தொகுதிகளாக, கொழும்பு, தங்கல்ல, பண்டாரவெல, அனுராதபுரம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு இருந்தன.

1942ல் புகழ்பெற்ற பொறியியலாளர் ஆர்.வி.பம்ஸ் அவர்களின் கீழ் பயிற்சி ஆராய்ச்சி, வடிவமைப்பு பிரிவுகளை உருவாக்கியமை, முழுமையான நீரியல் ஆய்வுகூடத்தையும் மற்றும் ஆறுகளை அளக்கும் அளவிடுதல் பிரிவையும் மற்றும் மண் இயக்கவியல் ஆய்வுகூடத்தையும் அமைப்பதற்கு பலப்படுத்துவதாக அமைந்தது.

அக்காலப்பகுதியிலேயே பயிற்சி, ஆராய்ச்சி, வடிவமைப்பு பிரிவுகளை மீளமைத்து ஆய்வு கூடங்கள் மற்றும் திட்டமிடல் அலுவலகங்கங்கள் அனைத்தும் மத்திய திட்டமிடல் மற்றும் ஆய்வு அலுவலகம் (ஊ.னு.சு.ழு.) என்று குறிப்பிடப்பட்ட மையப்படுத்தப்பட்ட நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

மருதானை பழுதுபார்க்கும் வேலைத்தலத்திலிருந்து இயந்திர பிரிவு இரத்மலாணைக்கு எடுத்துச் சென்றதன்மூலமும் பிரதான இயந்திர பொறியியலாளர் ஏ.எச்.ஜொன்சனின் கீழ் அதை விரிவுபடுத்தியமையும் இக்காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட தனித்துவமான வெற்றியாகவிருந்தது. இரண்டாவது உலக மகா யுத்தம் நடைபெறுகின்றபோது ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதும் தசாப்தத்தின் இறுதிப்பகுதியாகின்றபோது திணைக்களத்தின் செயற்பாடுகள் உயர்மட்டத்தை அடைந்திருந்தன.

பிரதான நிர்மாண பணிகளுக்காக திணைக்களம் நிர்மாண பொறியியலாளர்களின்  சேவையைப் பெற்றுக்கொண்டது. அத்துடன் தேர்ந்தெடுத்த முதலாவது வெளிக்கள உதவியாளர் குழுவை பல்கலைக்கழக கல்விக்காக இந்தியாவுக்கு அனுப்பியது.

1940ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் இறுதிப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்நாட்டின் முதலாவது பல்வேலை நீர்த்தேக்க கருத்திட்டமான கல்லோயா கருத்திட்டத்தை திட்டமிட்டமை, நிர்மாணித்தமை, உருவாக்கியமை, குறுகிய காலப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கொள்ளவு வளர்ச்சியை எடுத்துக்காட்டியது. ஒப்பந்தக்காரர் ஏ.ஏ.ஜி.மொறிசன் க்நூட்சன் நிறுவனம் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் 1949ல் கல்லோயா அணையை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்தது. அதன் பின்னர் வந்த வருடங்களில் பாரிய நிர்மாண பணிகளை ஆரம்பிப்பதற்காக இது திணைக்களத்தின் மன ஆற்றலை வளர்த்த ஒரு செயலாக இருந்தது.

முன்னர் இருந்த திணைக்கள தலைவர்கள்

1900 இலிருந்து இன்று வரை - நீர்ப்பாசன பணிப்பாளர்கள்

பொறியியலாளர் எச்.டி.எஸ்.வோர்ட் 1900 - 1908
பொறியியலாளர் ஆர்.டப்ளியு.ஸ்மித் 1909 - 1913
பொறியியலாளர் ஜே.ஏ.பெல்பர் 1913 - 1918
பொறியியலாளர் சி.எப்.எஸ்.பேகர் 1918 - 1923
பொறியியலாளர் ஆர்.எப்.மொறிஸ் 1923 - 1928
பொறியியலாளர் டப்ளியு.பிறவுன் 1928 - 1931
பொறியியலாளர் பீ.ஜி.பீட்ன் 1931 - 1935
பொறியியலாளர் ஜே.எப்.கெனடி 1935 - 1939
பொறியியலாளர் எஸ்.ஜி.டேலர் 1939 - 1950
பொறியியலாளர் டப்ளியு.ஏ.குத்ரி 1950 - 1952
பொறியியலாளர் டப்ளியு.டி.ஐ.அலகரத்னம் 1952 - 1955
பொறியியலாளர் ஏ.ஈ.சீ.த எஸ் குணசேகர 1955 - 1965
பொறியியலாளர் டி.டீ.ஈ.செனெவிரத்ன 1965 - 1967
பொறியியலாளர் வி.என் ராஜரத்னம்
1967 - 1970
பொறியியலாளர் எச்.த எஸ் மனம்பேரி 1970 - 1973
பொறியியலாளர் பி.எச்.பெரேரா 1973 - 1976
பொறியியலாளர் ஏ.மகேஸ்வரன் 1976 - 1979
பொறியியலாளர் ஆர்.யு.பர்னாந்து 1979 - 1981
பொறியியலாளர் ஆர்.ஜே.பி.பொன்ராஜா 1981 - 1984
பொறியியலாளர் எஸ்.சிவசுப்ரமணியம் 1985.02.05 - 1985.10.11
பொறியியலாளர் கே.டீ.பி.பெரேரா 1985 - 1989
பொறியியலாளர் என்.ஜி.ஆர் த சில்வா 1989.03.30 - 1989.10.31
பொறியியலாளர் கே.யோகநாதன் 1989.11.01 - 1994.11.30
பொறியியலாளர் டப்ளியு.என்.எம்.பொதேஜு 1994.12.01 - 1996.02.24
பொறியியலாளர் எல்.டி.விஜேசூரிய
1996.02.25 - 1999.09.30
பொறியியலாளர் டப்ளியு.பி.ஜினதாச 1999.10.01 - 2002.03.07
பொறியியலாளர் டீ.டப்ளியு.அர் வீரகோன் 2002.03.08 - 2004.04.26
பொறியியலாளர் ஜி.ரீ.தர்மசேன 2004.04.27 - 2004.12.15
பொறியியலாளர் எஸ்.ஆர் த சில்வா 2004.12.15 - 2005.11.18
பொறியியலாளர் பீ.எம்.எஸ். சமரசேகர 2005.11.18 - 2007.12.19
பொறியியலாளர் எச்.பி.எஸ்.சோமசிறி 2007.12.20 - 2010.09.10
பொறியியலாளர் கலாநிதி.ஜி.பி.ஏ.கொடலியத்த 2010.09.11 - 2012.06.28
பொறியியலாளர் திருமதி. ஜி.பி.ஜு.கமலதாஷ 2012.06.29 - 2015.01.02
பொறியியலாளர் வை.ஏ. மஜீத் 2015.01.03 - 2016.03.15
பொறியியலாளர் எஸ். எஸ். எல். வீரசிங்க 2016.03.16 - 2017.02.28
பொறியியலாளர் மு. துரைசிங்கம் 2017.03.01 - 2017.11.03

பொறியியலாளர் டப்ளியு.டி.ஐ. அழகரத்னம் (1952 – 1955) நீர்ப்பாசன பணிப்பாளராக நியமனம்பெற்ற முதலாவது இலங்கைப் பிரயையாவார்.

1995.06.06ஆம் திகதி பொறியியலாளர் டப்ளியு.என்.எம். பொதேஜு (1994.12.01 – 1996.02.24) முதலாவது நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதிவியில் நியமிக்கப்பட்டார்.

எதிர்கால சந்ததியினருக்காக அவர்களிடமிருந்த நோக்கு, தலைமைத்துவ பண்புகள், அர்ப்பணிப்பு, வழிகாட்டல் என்பவை காரணமாக பொறியியலாளர் ஏ.ஈ.சீ. த எஸ். குணசேகர (1955 – 1965) அவர்களும் பொறியியலாளர் ஏ.ஜே.பி. பொன்ராஜா அவர்களும் திணைக்களத்தை நேசிக்கின்ற மக்களின் மனங்களில் இன்னும் உயிர் வாழ்கின்றனர்.

 

Last Updated on Wednesday, 12 October 2016 08:39  சமீப செய்திகள்

Inundation Maps & Hydrological Annual

සිතියම් සදහා Downloads => Flood Data වෙත යොමුවෙන්න. Hydrological Annual සදහ...

Act. DA Appointment, EAA transfers & Appeal -2018

Details => Download=>Annual transfers

காப்புரிமை © 2017 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 04-12-2017.