புகுபதிகை
: Капитальный ремонт крыши. Быстрый ремонт крыши дома своими руками. Стоимость ремонта крыши. Ремонт потолка своими руками. Качественный ремонт потолков в квартире. Ремонт подвесных потолков. Схема подключения котла отопления. Быстрое подключение котла к системе отопления. Подключение батарей отопления схема.
Продажа самодельных вездеходов. Лучшие самодельные мини вездеходы. Устройство самодельных вездеходов. Ванная комната дизайн фото. Красивый дизайн интерьера ванной комнаты. Дизайн ванной комнаты в квартире. Как начать бизнес с нуля. Лучшие идеи малого бизнеса с нуля. Новый бизнес с нуля. Самодельные квадроциклы чертежи. Как сделать самодельный квадроцикл сегодня. Самодельный квадроцикл своими руками. Стяжка пола своими руками. Быстрая и сухая стяжка пола своими руками. Как сделать стяжку своими руками.
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி மீள்பார்வை

மீள்பார்வை

நீர்ப்பாசன பாரம்பரியம்

மனிதவர்க்கத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தாமல் ஒரு துளி நீரைக்கூட கடலில் கலப்பதற்கு இடமளிக்கமாட்டோம்”.
(மகா பராக்கிரமபாகு மன்னன்: 1123-1186) என்ற தொனிப்பொருளை உரித்தாகக்கொண்டு அதை நிறைவேற்றிக்கொள்ள முயற்சியெடுக்கின்றோம்.

“செயல்”

நீர்ப்பாசன திணைக்களம் அரசாங்கத்தின் கொள்கை சட்டகத்துக்குள் செயற்பட்டு உணவு, சீவனோபாயம், சூழல் என்பவற்றுக்காக நீர் வளத்தையும் நில வளத்தையும் நிலைபேறாக முகாமைப்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் வசதிகள் செய்து கொடுத்தல்.


“தொலைநோக்கு பார்வை"

இலங்கையில் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக நீர் வளத்தையும் நில வளத்தையும் அபிவிருத்தி செய்வதையும் முகாமைப்படுத்துவதையும் முன்னேற்றுதல். நவீன தொழில்நுட்பத்தையும் மனிதவளத்தையும் ஒன்றிணைத்து நீர்ப்பாசனமளிக்கும் விவசாயம், நீர் மின்சாரம் மற்றும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக தலைசிறந்த பயன்களைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு நீர்ப்பாசன திணைக்களம் நீர் வளத்தையும் நில வளத்தையும் திட்டமிடல், அவதானித்தல், கட்டுப்படுத்துதல், முகாமைப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

நோக்கங்கள்

நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான நோக்கம்:

 • நீர்ப்பாசன விவசாயம், நீர் மின்சாரம், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துதல், வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்துதல், கைத்தொழில்களுக்குப் பயன்படுத்துதல் மற்றும் விவசாய அபிவிருத்தி என்பவற்றுக்காக நீர் வளத்தையும் நில வளத்தையும் அபிவிருத்தி செய்தல்
 • நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் கருத்திட்டங்களில் பயிர்ச்செய்யக்கூடிய காணிகளுக்கு நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் வசதிகளை வழங்குதல்.
 • கிராமிய விவசாய சமூகத்தினரின் பண்ணைகளில் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதன்மூலமும் அம்மக்களின் வறுமையை ஒழித்தல்
 • நிலைபேறான விவசாயத்துக்காக நீரை முகாமைப்படுத்துதல்.
 • பிரதான /நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களில் நிலத்தின் மற்றும் நீரின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்
 • பிரதான /நடுத்தர நீர்ப்பாசன முறைமைகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வளங்களை முகாமைப்படுத்துதல் மற்றும் பங்கேற்பு முகாமைத்துவம்.


செயற்பாடுகள்

 • நிலவளத்தையும் நீர் வளத்தையும் தலைசிறந்தமுறையில் பயன்படுத்துவதற்காக பல்வேறு நதிப்படுகைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரதான திட்டங்களைத் தயாரித்தல்.
 • நீர்ப்பாசனம், நீர் மின்சாரம், வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துதல், காணி மீட்டல் கருத்திட்டங்களில் கருத்திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் விரிவாகத் திட்டமிடல்
 • உணவு உற்பத்தியின்பொருட்டு விவசாயிகள் பயிர்ச் செய்வதற்காக புதிய காணிகளுக்கும் இருக்கின்ற காணிகளுக்கும் நிலக் கீழ் மற்றும் ஏற்று நீர்ப்பாசனத்தின் கீழ் நீரைப் பாதுகாத்தல், திருப்புதல், விநியோகித்தல் என்பவற்றுக்கு நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்ட கருத்திட்டங்களை உருவாக்குதல்.
 • ஆகக் குறைந்த இடர்களுடன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக பயிர்ச்செய்யக்கூடிய காணிகளில் மழை நீரைப் பயன்படுத்தக்கூடியவகையில் (மானாவரி பயிர்ச்செய்கை) அத்தகைய காணிகளில் பாதுகாப்புக்காக வடிகால்கள், வெள்ளப் பெருக்கைப் பாதுகாத்தல், உவர் நீரை அகற்றுதல் ஆகிய கருத்திட்டங்களை அமைத்தல்
 • நடுத்தர மற்றும் பிரதான நிலக் கீழ் நீர், வடிகால்கள், ஏற்று நீர்ப்பாசன கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், பராமரித்தல், மேம்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் அக்கருத்திட்டங்களின் நீர் முகாமைத்துவம்.
 • நீர் வள அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு ஏற்புடையதான வகையில் நீர்கொண்டு செல்லும் விஞ்ஞானம், நீரியல், மண்பற்றிய கலை, பொறியியல் புவியியல், புவியியல் தகவல் முறைமை, பொறியியல் பொருட்கள் மற்றும் காணிப் பயன்பாடு தொடர்பான ஆய்வுகள்
 • சிறந்தமுறையில் பயன்படுத்துவதற்காக மனிதவள அபிவிருத்தி
 • இலங்கை அரசாங்கத்தின் நிதிப்பிரமாணங்களுக்கு ஏற்றவகையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் நிதி முகாமைத்துவ முறைமை மற்றும் கணக்கீடு, ஆவணப்படுத்தல், கணக்காய்வு முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு.
 • அரசாங்க திணைக்களங்கள், நியதிச்சட்ட சபைகள்/கூட்டுத்தாபனங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆட்களுக்கு, நீர் வளத்தை அபிவிருத்திசெய்தல், அடிப்படை பொறியியல் கலை, மண் வேலை மற்றும் கொன்கிறீட் வேலைகளில் தரக் கட்டுப்பாடு, நீர்கொண்டு செல்லும் மாதிரிகளைப் பரீட்சித்தல், காணிப் பயன்பாட்டை திட்டமிடுதல் தொடர்பாக ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.
Last Updated on Tuesday, 23 April 2013 04:59  சமீப செய்திகள்

Inundation Maps & Hydrological Annual

සිතියම් සදහා Downloads => Flood Data වෙත යොමුවෙන්න. Hydrological Annual සදහ...

Act. DA Appointment, EAA transfers & Appeal -2018

Details => Download=>Annual transfers

காப்புரிமை © 2017 நீர்ப்பாசன திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 04-12-2017.